மகளை பாலியல் தொழிலில் தள்ளிய தாய்! கடன் தொல்லையால் இப்படி ஒரு கொடுமை

கடன் சுமைக்காக 17 வயது சிறுமியை பெற்ற தாயே பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடுமை போலீசார் விசாரணை மூலம் அம்பலமாகி உள்ளது.


பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவருக்கு ஆம்பூர் பகுதியை சேர்ந்த பிரேமா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்தப் பெண், தனது குடும்ப பிரச்னைகளை பிரேமாவிடம் கூறி, தனது 17 வயது சிறுமிக்கு, வேலை கிடைக்க உதவி செய்துத் தருமாறு கேட்டுள்ளார். அத்துடன் தனது மகளை தமிழகத்திற்கு அழைத்து வந்த அப்பெண் பிரேமாவிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளார். பின்னர் பிரேமா, அந்தச் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக புகார் எழுந்துள்ளது.இதனையடுத்து சிறுமி அவசர போலீஸ் 100-க்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் ஆம்பூர் துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தன் தலைமையில் போலீசார் விரைந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுமியின் தாயார், லதா உள்ளிட்ட மூவரை போலீசார் விசாரித்தபோது, சிறுமியை பெற்ற தாயே பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடுமை தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து போலீசார் மூவரையும் சிறையில் அடைத்தனர். அத்துடன் இடைத்தரகராக செயல்பட்ட ஏஜாஸ் மற்றும் காட்பாடி பகுதியை சேர்ந்த லட்சுமி ஆகியோரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.