திருப்பூர் பெரிச்சிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


திருப்பூர் பெரிச்சிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பள்ளியின் ஆண்டுவிழா பணி நிறைவுபெறும் தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா மற்றும் அறிவியல் தின விழா என முப்பெரும் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.


தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


இவ்விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் E. பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். கிராம கல்விக்குழு தலைவர் எஸ்.சிவசரண்யா முன்னிலைவகித்தார். தலைமை ஆசிரியர் எ.ஞானம்மாள் வரவேற்றப்புரையாற்றினார். இடைநிலை ஆசிரியர் சூ.வளர்மதி ராய் ஆண்டறிக்கை வாசித்தார். மேலும் எம்.ஆர்.ரத்தினசாமி, என்.நாகப்பன், முன்னாள் ஆசிரியர் ஆர்.கந்தசாமி, முன்னாள் ஆசிரியர் கனகராஜ், என்.தெய்வசிகாமணி, ஆதவன் முருகேசன், தம்பி குமாரசாமி, என்.ஜெகநாதன், ஜோதி சிவபாக்கியம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். 


தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


தலைமை ஆசிரியர், சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பிக்கப்பட்டது. புரவலர் திட்டத்தின் மூலமாகவும் தனிப்பட்ட முறையிலும் பள்ளிக்கு நன்கொடை கொடுத்து உதவியவர்களுக்கும் பாராட்டி பொன்னாடை போர்த்தி சிறப்பித்தனர்.  


தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


வருடம் முழுவதும் தவறாமல் பள்ளிக்கு வந்த மாணவர்கள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாணவ மாணவியரின் காலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளை மாணவர்களின் பெற்றோர்கள் அப்பகுதி பொதுமக்கள் என ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.