நடிகர் விஜய் வீட்டில் ஒன்றுமே இல்லை - வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல்நடிகர் விஜயிடம் விசாரணை முடிந்தது ரொக்கமும் வரி ஏய்ப்பும் கண்டுபிடிக்க முடியவில்லை என தகவல்.

 

வீடியோவை காண 

பிகில் படத்தில் நடித்ததற்கு வாங்கப்பட்ட சம்பளம் தொடர்பாக நடிகர் விஜயிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் 30 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர். கடலூர் மாவட்டம் நெய்வேலியில் தளபதி 64 மாஸ்டர் படப்பிடிப்பில் நடிகர் விஜய் ஈடுபட்டிருந்தார். அப்பகுதியில் நடிகர் விஜய் வில்லன்களுடன் மோதும் ஆக்ரோஷமான சண்டைக் காட்சி படப்பிடிப்பு மேற்கொள்ளப்பட்டு வந்தது. அப்போது திடீரென படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைந்த வருமான வரித்துறை அதிகாரிகள் நடிகரிடம் விசாரணை மேற்கொண்டனர் தொடர்ந்து அப்பகுதியில் இருந்த கேரவனில் விசாரணை மேற்கொள்ளப் பட்டது தொடர்ந்து மேலும்  தகவல்கள் தேவைப்பட்டதாலும் தனியாக நடிகர் விஜய் விசாரிக்க வேண்டிய கட்டாயம் இருந்ததாலும் நடிகர் விஜய்யை அங்கிருந்து அழைத்துச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் பனையூரில் உள்ள பங்களாவில் நடிகர் விஜயிடம் விசாரணை மேற்கொண்டனர் 30 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற இந்த விசாரணையில் நடிகர் விஜய் சிறப்பான ஒத்துழைப்பை அளித்ததாகவும் அவரிடமிருந்து எந்த விதமான ரொக்கப்பணம் மற்றும் வரி ஏய்ப்பு செய்து அதற்கான ஆதாரங்களும் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் உரிய ஆவணங்கள் நடிகர் விஜயிடம் இருந்ததாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்திடம் தற்போது வரை கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் அதேபோல மதுரையிலுள்ள பைனான்சியர் இடமும் நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு சொந்தமான இடத்தில் கணக்கில் காட்டப்படாத 77 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பிகில் படம் 300 கோடி ரூபாய் வசூல் என சொல்லப்பட்டு வந்தது மிகப்பெரிய வசூலாக கருதப்பட்டு வரும் நிலையில் தற்பொழுது பிகில் பட வருவாய் 300 கோடி என குறைத்து காட்ட பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருவது திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆக நடிகர் விஜய் தனது வருமான வரியை முறையாக செலுத்திவிட்டு இந்த வருமான வரித்துறை சோதனை யில் வெளிச்சமாகி உள்ளது இதனை அடுத்து மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் விஜய் திரும்பியதை அடுத்து மீண்டும் மாஸ்டர் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.