. 10ம் தேதி திருப்பூர் தினசரி காய்கறி மார்க்கெட் இடிக்கும் பணி!

 

ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்து கருத்து தெரிவிக்க புதிய க்யூ ஆர் கோட்டினை திருப்பூர் மாநகராட்சி ஆணையர் சிவகுமார் அறிமுகம் செய்தார். 10ம் தேதி திருப்பூர் தினசரி காய்கறி மார்க்கெட் இடிக்கும் பணி துவங்குகிறது ஆணையர் பேட்டி.

 

திருப்பூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 1000 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணிகள் குறித்து  மக்கள் தங்கள் கருத்துக்களை பகிரும் வகையில் 24 கேள்விகள் அடங்கிய புதிய செயலியை க்யூ ஆர் கோட் மூலம் பதிவிறக்கம் செய்து தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும் முறையை திருப்பூர் மாநகராட்சி ஆணையர் சிவகுமார் அறிமுகம் செய்து வைத்தார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நான்கு பழைய மார்கெட்டுகள் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்படும் எனவும், பழைய பேருந்து நிலையம் நவீன முறையில் மாற்றி கட்டப்படும் பணிகள் துவங்கி உள்ளதாகவும், அம்ருத் திட்டத்தின் கீழ் 4வது கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் மேற்கொண்டு வருவதாகவும் மேட்டுப்பாளையத்தில் இருந்து பவானி ஆற்று நீர்  கொண்டு வரும் இப்பணி 2022ம் ஆண்டு நிறைவடையும் என தெரிவித்தார், மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டங்கள் இல்லாத பகுதிகளுக்கு பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.  வரும் 10ம் தேதி திங்கட்கிழமை  அன்று பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள தினசரி காய்கறி மார்க்கெட் இடிக்கும் பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் அதற்காக போலீஸ் பாதுகாப்பு கேட்கப்பட்டுள்ளதாகவும் ஆணையர் தெரிவித்தார்.

Previous Post Next Post