எரிமலையின் ஓரத்தில் மோடி மகுடி வாசிக்கிறார்: வைகோ பேட்டி

எரிமலையின் ஒரத்தில் மோடி மகுடி வாசிக்கிறார் வைகோ பேட்டி


சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:- 



திமுக தலைமையிலான மதசார்பற்ற கட்சிகள் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று  2 கோடியே 5 லட்சம் கையெழுத்தை ஜனாதிபதியிடம் வழங்கினோம். குடியுரிமை திருத்த சட்டத்தை எந்த காரணத்தை கொம்டு திரும்ப பெற மாட்டோம் என்று பிரதமர் மோடி பேசுகிறார். எரிமலையின் ஒரத்தில் உட்கார்ந்து மகுடி வசித்து கொண்டு இருக்கிறார். எரிமலை எப்போது வெடிக்கும் என்று தெரியாது. சட்டமன்ற முற்றுகை போராட்டத்தில் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் கட்டுபாட்டுடன் நடந்து கொண்டனர்.


சாலையில் கிடந்த பொருட்களையும் அப்புறப்படுத்திவிட்டு சென்றனர். மக்கள் மனதில் இஸ்லாமிய மக்களின் கோரிக்கை நியாயமானது என்று ஏற்பட்டு உள்ளது. பொது சிவில் சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிடுகிறது. இந்தியாவில் ஒரு ரத்த கிளறியை உருவாக்கி இந்து, முஸ்லீம் பிரித்து கொண்டு வர இந்துத்துவ சக்திகள் முயற்சிக்கின்றன. அதுப்போல் ஒருகாலும் நடக்காது. இந்துக்கள், கிறிஸ்துவர்கள், சமணர்கள், சீக்கியர்கள் என எல்லா தரப்பினரும் இஸ்லாமியர்களுடன் சகோதர்களாக தான் இருப்பார்கள். தமிழக வரலாற்றில் நடக்காத ஒரு போராட்டத்தை நடத்தி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். மேலும் அவரிடம் ஜனாதிபதியிடம் கடிதம் தந்தபோது என்ன சொன்னார் என்று கேட்டதற்கு வணக்கம் என்று சொன்னார் என தெரிவித்தார்.


Previous Post Next Post