நெல்லையப்பர் கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

மானூர் அருகே


நெல்லையப்பர் கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு


நெல்லை பிப் 20


மானூர் அருகே தென்கலத்தில் நெல்லையப்பர் கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 3 சென்ட் நிலத்தை அறநிலையத்துறை நவடிக்கை மூலம் மீட்கப்பட்டது.


சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோயிலுக்கு சொந்தமான நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்கள் ஏராளமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன. இதில் மானூர் வட்டம், தென்கலம் கிராமத்தில் சுமார்  600 ஏக்கருக்கும் அதிகமான  நிலங்கள் உள்ளன. இதில் 30 சென்ட் அமைந்துள்ள நிலத்தில் தாழையூத்து புளியங்கொட்டாரம் கிராமத்தை சேர்ந்த முருகாண்டி மகன் பாலையா என்பவர் 3 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்துள்ளார். மேலும் கடந்த 8ம் தேதி நிலத்தை சுற்றிலும் வேலி அமைத்துள்ளார்.இதுகுறித்து கோயில் செயல்அலுவலர் ராமராஜா தாழையூத்து டிஎஸ்பி அலுவலகத்திலும், மானூர் போலீசிலும் புகார் செய்தார். 


புகாரையடுத்து தாழையூத்து டிஎஸ்பி பொன்னரசு, மானூர் தாசில்தார் மோகன், துணை தாசில்தார் மாரியப்பன், குறுவட்ட வருவாய் ஆய்வாளர் உமா, தென்கலம் கிராம நிர்வாக அலுவலர் முருகன் ஆகியோர் முன்னிலையில் நெல்லையப்பர் கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலம் அளவிடு செய்யப்பட்டது. 


இதில் கோயிலுக்கு சொந்தமான நிலம் 3 சென்ட் ஆக்கிரமிப்பு செய்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் பாதுகாப்புடன் நிலத்தை சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த வேலியை அகற்றி நெல்லையப்பர் கோயில் நிலம் மீட்கப்பட்டது.