உதயம் பிரீமியம் காட்டன் நிறுவன ஷோரூம் திறப்பு விழா

ஈரோடு ரயில் நிலையத்தில் புதிதாக உதயம் பிரீமியம் காட்டன் நிறுவன ஷோரூம் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது .


tamil anjal


இந்நிகழ்ச்சியில் தென்னக ரயில்வே சேலம் கோட்ட முதன்மை வணிக மேலாளர் ஹரி கிருஷ்ணன் கலந்து கொண்டு ஷோரூமை திறந்து வைத்தார். முதல் விற்பனையை ஆர்த்திகா காட்டன் மில்ஸ் முதன்மை மேலாளர் தண்டபாணி துவக்கி வைக்க,ஈரோடு சக்தி விநாயகர் டெக்ஸ் உரிமையாளர் சண்முகம் பெற்றுக்கொண்டார். முன்னதாக உதயம் பிரிமியம் காட்டன் நிறுவன தலைமை செயல் அதிகாரி நந்த குமார் வரவேற்றார். இந்த திறப்பு விழாவில் ரயில்வே உயரதிகாரிகள்,வியாபாரிகள் கலந்து கொண்டனர். புதிதாக திறக்கப்பட்ட ஷோரூமில் உதயம் பிரிமியம் காட்டன் நிறுவனத் தயாரிப்புகளான வேட்டிகள்,சட்டைகள், பஞ்சகச் வேட்டிகள்,பேன்ஸி பார்டர் வேட்டிகள் என ஏராளமான வகைகள்,காட்டன் மற்றும் லினன் சட்டை வகைகள், உதயம் வேட்டி வர்ணா செட்டுகள், சிறுவர்களுக்கான வேட்டி, சட்டை செட்டுகள், உள்ளாடைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.