திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம்

திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று பல லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள். பவுர்ணமி அன்று கிரிவலம் வந்தால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. அதனால் திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது தன்படி இந்த மாத (தை) பவுர்ணமி வருகிற 8ந் தேதி (சனிக்கிழமை) பகல் 1.43 மணிக்கு தொடங்கி மறுநாள் 9ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பகல் 12.43 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வரலாம். இதுவே கிரிவலம் வர உகந்தநேரம் ஆகும் என அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.