திட்டக்குடி அருகே கிராம பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திட்டக்குடி அருகே கிராம பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

 


 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மங்களூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 

கோடங்குடி ஊராட்சியில் முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோடங்குடி பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் தயா பேரின்பன் தலைமையில் நடைபெற்றது. 

 

கோடங்குடி, எழுமாத்தூர் கிராம பொதுமக்கள், அனைத்து கட்சியினர், விவசாய சங்கத்தினர் இணைந்து கடந்த  3 ஆண்டுகளாக  மத்திய மாநில அரசுகளால் மற்றும் அதிகாரிகளால் செயல்படுத்தப்பட்ட  திட்டங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்,

கோடங்குடி ஊராட்சியின்  பொதுமக்களின் வளர்ச்சிக்காக அரசு ஒதுக்கிய நிதியில்  முறைகேடுகளில் ஈடுபட்ட  அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,

குடியரசு தினத்தன்று புறக்கணித்த  கிராமசபை  கூட்டத்தை மீண்டும்  அனைத்து ஆவணங்களுடன்  மற்றும் அதிகாரிகளுடன்  மீண்டும் கிராம சபை கூட்டத்தை  நடத்த  வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றன. இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கோடங்குடி பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் விசிக ஒன்றிய செயலாளர் ஜான் செங்குட்டுவன்,  மக்கள் நீதி மையம் ஒன்றிய செயலாளர் விவேகானந்தன், சிலம்பரசன், பாலமுருகன், முருகப்பன், பெரியசாமி, பிரியா, மீனாம்பாள், பட்டத்தால், வைத்திலிங்கம்,  உட்பட பலர் கலந்து கொண்டனர்.