காளையர்களை கதற விட்ட கட்டப்பா: அலகுமலை ஜல்லிக்கட்டில் அதகளம் - தடுப்புகளில் தொங்கி தவித்த வீரர்கள் !

திருப்பூர் அலகு மலையில் நடந்த ஜல்லிக்கட்டில் 784காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்ற நிலையில், 95 பேர் காயமடைந்துள்ளனர். சிறந்த வீரராக 12 மாடுகள் பிடித்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஜெகதீஷ் வென்றார். புதுக்கோட்டை மேட்டுப்பட்டியை சேர்ந்த சின்னத்துரையின் காளை கட்டப்பா-2 சிறந்த காளைக்கான பரிசை வென்றது. ஜல்லிக்கட்டு களத்தில் வீரர்களை கதற விட்ட கட்டப்பா அனைவரது மனதிலும் இடம் பிடித்தது. 


வீடியோ இதோ:





திருப்பூர் அலகுமலையில் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி துவங்கி நடைபெற்றது. இதில் 800 காளைகள் பதிவு செய்திருந்த நிலையில், காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று மாடுகளை பிடித்தனர்.

 

முழு ஜல்லிக்கட்டு சுவாரசிய காளைகள் வீடியோ இதோ:




 இந்த நிலையில், ஒரு சில காளைகள் களத்தில் நின்று விளையாடி மக்கள் மனதை கவர்ந்தன. கட்டப்பா என்கிற காளை 6 நிமிடங்கள் களத்தில் நின்று வீரர்களை துரத்தியது. காளையை கண்டு வீரர்கள் அனைவரும் அஞ்சி ஓடியது அனைவரையும் கவர்ந்தது.

 

வீரத்தமிழச்சியின் காளை வீடியோ :




 

 

ஒரு கட்டத்தில் கட்டப்பாவை வெளியேற்ற படாத பாடு பட்டு கயிறு கட்டி வேனில் இழுத்து சென்றனர். இதே போல கரூர் வெள்ளை மாடு, என்கிற மாடும் வீரர்களுடன் சதிராடியது. அதை பொதுமக்கள் கரவொலி எழுப்பி ரசித்தனர். வீரர்களும் சளைக்காமல் மாடுகளை பிடித்து பரிசுகளை அள்ளினார். சுத்து மாடுகள் என்றழைக்கப்படும் காளைகள் ஏராளமானவை ஜல்லிக்கட்டு களத்தில் நின்று விளையாடி மக்கள் மனம் கவர்ந்தன. 

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் புதுக்கோட்டை சின்னத்துரை  காளை கட்டப்பா-2 சிறந்த மாடாக தேர்ந்தெடுக்கப்பட்டு  பரிசை அள்ளியது. 12 காளைகளை பிடித்த மதுரை மாவட்டம் வெளத்தூரை சேர்ந்த ஜெகதீஷ் என்ற வீரர் சிறந்த வீரருக்கான முதல் பரிசை  தட்டி சென்றார்.11 மாடுகள் மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்தி இரண்டாமிடத்தையும், 9 மாடுகள் பிடித்த  திண்டுக்கல் நத்தத்தை  சேர்ந்த கார்த்தி மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். 

 இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் 40 வீரர்கள் 37 உரிமையாளர்கள் 17 பார்வையாளர்கள் என  94 பேர் காயமடைந்தனர். 

 

படங்கள்: 

 

 


முதல் பாய்ச்சலிலேயே வீரனை புரட்டி போட்டு முகத்தின் மீது கால் வைத்தது காளை  கட்டப்பா 


எதிரில் நின்றதால் மாட்டுக்காரர்களையும் விரட்டி அடித்து புரட்டி போட்டது.



 


எத்தணை கயிறு போட்டாலும் எகிறி அடித்த முரட்டுக்காளை கட்டப்பா தான்.. 


ஜல்லிக்கட்டு காளையை விட்டு போக மனமில்லாமல் அடம்பிடித்ததால் கயிறு போட்டு கட்டி இழுத்து சென்றனர். 


கட்டப்பாவின் மிரட்டலுக்கு பயந்து கம்பி வேலியில் ஏறிக்கொண்ட காளையர்கள் 


ஜல்லிக்கட்டு துவக்க நிகழ்ச்சியில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், போலீஸ் எஸ்.பி., திஷா மிட்டல், எம்.எல்.ஏ.,க்கள் கரைப்புதூர் நடராஜன், சு.குணசேகரன், கே.என்.விஜயகுமார், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


பாய்ச்சலில் வீரம் தெரியும்..

முடிந்தால் தொட்டுப்பார்...


பரபரப்பாக இருந்த வாடிவாசல்..


பாய்ந்து வரும் காளையை கண்டு தடுப்புகளில் ஏறி தப்பிக்கும் போலீசார்.

காளைகளை அழைத்து வந்த வீரத்தமிழச்சிகள் 

 

 




 

 

புழுதி பறக்குது பாரு.. காளைகள் சண்டை 

 


 

அடடா.. அடடா.. சூப்பரு.. சூப்பரு...

 

தொட்டுப்பார்.. தொட்டுப்பார்.. 

 

சுத்துது சுத்துது.. 

 

 

ஓடிப்போ.. ஓடிப்போ.. 

 

தனி ஸ்டைலில் பேசி அசத்திய சரவணன் 

 


பார்வையாளர்களில் ஒரு பகுதியினர் 

 


 

 


குடும்பத்துடன் வந்து ஜல்லிக்கட்டு கண்டு ரசித்த திருப்பூரின் முன்னாள் சப் கலெக்டர், தற்போதைய கோவை மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன் குமார் 


 

மாடுகளை உசுப்பேற்றி உற்சாகப்படுத்திய, மாட்டுக்கார வேலன்கள்

வாடி வாசலில் வரிசை கட்டிய காளைகள் 


'இது அலகுமலை ரகசியம்' - திருப்பூர் ஜல்லிக்கட்டில் குசலம் பேசிய குட்டீஸ் 

 

Previous Post Next Post