வீணாய் போன பிளாஸ்டிக் பாட்டில், ஆஸ்திரேலியாவுக்கு துணியாய் போன அதிசயம்!

திருப்பூரிலிருந்து ஆஸ்திரேலிய டென்னிஸ் போட்டியில் பணியாற்றுபவர்களுக்கு பிளாஸ்டிக் மறுசுழற்சி ஆடைகளை  தயாரித்து வழங்கும் பின்னலாடை என்.சி.ஜான் & சன்ஸ் நிறுவனம்.

 

வீடியோவை காண 
 

திருப்பூர் முதலிபாளையம் பகுதியில் உள்ள சிப்கோ தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் நிறுவனம் என்.சி.ஜான் & சன்ஸ். இந்நிறுவனம் மறுசுழற்சி செய்யப்பட்ட பருத்தி ஆடைகளை கடந்த 7 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் உள்ள நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளது.

 


 

இதனை அறிந்த டென்னிஸ்  ஆஸ்திரேலியா அமைப்பு ஆஸ்திரேலிய ஓபன் தொழிலாளர்களுக்கு வடிவமைக்கும் பணியை என் நிறுவனத்திடம் கூறியது. இதனையடுத்து பழைய பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களை மறுசுழற்சி செய்து நூலிழைகள் தாயாரித்து அதன் மூலமாக பின்னலாடை களை வடிவமைத்து மாதிரி வடிவமைப்புகளை அனுப்பியது.

 


 

சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த ஆடைகளால் கவரப்பட்ட டென்னிஸ் ஆஸ்திரேலியா அமைப்பினர் முதல் கட்டமாக 25 ஆயிரம் ஆடைகளை உற்பத்தி செய்யும் ஆர்டரை கொடுத்துள்ளனர். தற்போது இந்த ஆடைகளை தயார் செய்து அனுப்பியுள்ளதாகவும் இதன் மூலமாக மேலும் பல ஆர்டர்கள் கிடைத்து வருவதாகவும் இந்நிறுவனத்தின் பொது மேலாளர் சத்தியநாராயணன் தெரிவித்தார்.

 


 

மேலும் இந்நிறுவனத்திற்கு தேவையான மின் ஆற்றலையும் காற்றாலை மற்றும் மறுசுழற்சி மூலம் செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தனர். இந்த மறுசுழற்சி ஆடைகளுக்கு வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில் பிளாஸ்டிக் கழிவுகள்  குறையும் எனவும் பெருமிதம் தெரிவித்தனர்.

 

Previous Post Next Post