யோகிபாபுவின் திடீர் திருமணம், மஞ்சு பார்கவியை கரம் பிடித்தார்


மஞ்சு பார்கவியை கரம் பிடித்த யோகி பாபு. குலதெய்வ கோயிலில் திடீர் திருமணம். மணமகள் மஞ்சு பார்கவியுடன் காமெடி நடிகர் யோகிபாபு திருமணம் திருத்தனி அருகேயுள்ள  அவரது குல தெய்வ கோயிலில் இன்று காலை திடீரென நடந்தது. தற்போதைய நிலையில் பிசி நடிகராக இருப்பவர் யோகிபாபு. அவர் நடிக்காத படங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.கடந்த சில மாதங்களுக்கு முன் துணை நடிகை ஒருவருடன் யோகி பாபு இருக்கும் போட்டோ வைரலானது. ஆனால் போட்டோவில் இருக்கும் பெண்ணுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, சம்பந்தப்பட்ட அந்தப் பெண் ஒரு துணை நடிகை. அவர், ஒரு படத்தின் ஷூட்டிங்கில் யோகி பாபுவுடன் அந்த செல்பியை எடுத்ததாகத் தெரிவித்ததால் பிரச்னை முடிந்தது.


இந்நிலையில் யோகிபாபுவுக்கு இன்று (05/02/2020) காலை திடீரென திருமணம் நடை பெற்றுள்ளது. மணமகள் பெயர் மஞ்சு பார்கவி. யோகிபாபுவின் குலதெய்வ கோவிலில் வைத்து இந்த திருமணம் நடைபெற்றது. இதில் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மார்ச் மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடை பெறவுள்ளது.


திருமணம் குறித்து வெளிப்படையாக அறிவிப்பேன் என மேடைகளில் பேசிய நிலையில் யோகி பாபு திடீர் திருமணம் செய்து கொண்டார். நடிகர் யோகி பாபுவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மார்ச் மாதம் சென்னையில் நடைபெற உள்ளது. இதையடுத்து நடிகர் யோகி பாபுக்கு திரையுலகினர் பலரும் ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்கள் மூலமாக வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.