தனுஷ் படம் எடுக்க தடை கேக்கறாங்க..


தமிழ்நாடு முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் மாநில அமைப்பு செயலாளரும் நெல்லை மாநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான பவானி வேல்முருகன் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை துணை தலைவர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது


கொடியன்குளம் மணியாச்சி சாதி கலவரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் கர்ணன் படத்தை தடை செய்ய வேண்டும்.
குறிப்பாக நெல்லை- தூத்துக்குடி மாவட்டத்தில் படப்பிடிப்பு நடத்த தடை விதிக்க வேண்டும்.


 தென் மாவட்டங்களில் அமைதி சூழ்நிலை நிலவி வரும் நிலையில் இதுபோன்ற படப்பிடிப்புகளால் மீண்டும் ஒரு கலவர சூழ்நிலை ஏற்படும் அபாயம் உள்ளது.


 கர்ணன் திரைப்படத்தில் மணியாச்சி காவல்நிலையம் என பெயரிட்டு அந்த காவல்நிலையத்தை நடிகர் தனுஷ் தாக்குவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.


 இது காவல்துறை கண்ணியத்தை கெடுப்பதாக அமைகிறது.
 குறிப்பாக அந்த திரைப்படத்தில் தேவர் சமூகத்தை மிகவும் விமர்சித்து வருகிற மாதிரி காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
 தொடர்ந்து இது போன்ற திரைப்படங்கள் எடுத்து இரு சமூக மக்களிடையே சாதி கலவரத்தை தூண்டி வருகிற இயக்குனர் மாரி செல்வராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.