கொரோனாவிலிருந்து தப்பிக்க நிலவேம்பு : நெல்லை சித்தா கல்லூரி மாணவர்கள் பொதுமக்களுக்கு வழங்குகின்றனர்

கொரோனா நோய் பரவல் உலக சமுதாயத்தையே கவலைப்பட வைத்துள்ளது. இந்த நோய் பரவலால் அனைத்து நாடுகளின் மக்களும் கவலை அடைந்து உள்ளனர். 


இந்த நிலையில், நெல்லை மாவட்ட சித்தா கல்லூரி மாணவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை துவக்கி உள்ளனர். 


நெல்லை மாவட்டத்தில் கொரோனா  வைரஸ் காரணமாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் மக்களுக்கு வழங்குவதற்கு நில வேம்பு கசாயத்தை மாவட்ட சித்தா மருத்துவ அலுவலகம் மற்றும் சித்தா கல்லூரி மாணவர்கள் தயார் செய்துள்ளனர்.


அந்த நிலவேம்பு கசாயம் தற்போது அவர்களுக்கு கொடுப்பதற்காக தயார் படுத்தப்பட்டு வருகிறது. இதை தனிமைப்படுத்தப்பட்டு வீட்டில் இருக்கும் பொதுமக்களுக்கு இந்த கல்லூரி மாணவர்கள் வழங்க உள்ளனர்.