200 பேருக்கு 25 கிலோ அரிசி: பனப்பாக்கம் எச்.ரவி வழங்கினார்






கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர இயலாத நிலை நிலவுகிறது.

இதனை கருத்தில் கொண்டு அம்மா மக்கள் முன்னேற்றம் கழக பொது செயலாளர் டிடிவி,தினகரன் தொண்டர்கள் அனைவரும்  பொது மக்களுக்கு தங்களால் இயன்ற உதவி செய்திட ஆணையிட்டார் அதற்கிணங்க காஞ்சிபுரம் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் குன்னத்தூர் ஒன்றிய கழகம் சார்பில்  பனப்பாக்கம் மற்றும் வட்டம்பாக்கம் பகுதிகளில் அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் பனப்பாக்கம் எச், ரவி அவர்கள் தலைமையில் கழகத்தினர் ஏழை எளிய மக்கள் 200 பேருக்கு 25 கிலோ அரிசி உப்பு ,சோப்பு, உள்ளிட்ட பொருட்களை ஏழை எளிய. மக்களுக்கு  வழங்கினர்


 

 




 

Attachments area