ஜெர்மன் நாட்டை சேர்ந்த 4 பேர் சென்னைக்கு அனுப்பிவைக்க  தி.மலை ஆட்சியரிடம் கோரிக்கை மனு


திருவண்ணாமலை மார்ச்,29 - திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று காலை ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஒரு பெண் உள்பட 4 பேர் வந்தனர் பின்னர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமியை நேரில் சந்தித்து தாங்கள் கடந்த நவம்பர் மாதம் திருவண்ணாமலைக்கு வந்ததாகவும் தங்களுக்கு புராண வைரஸ்களுக்கு எதுவும் இல்லை என்றும் ஜெர்மனிக்கு செல்லவேண்டும் அதனால் எங்களை சென்னைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர்.


அப்போது ஆட்சியர் தற்போது உள்ள சூழ்நிலையில் இதுகுறித்து தங்களால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது தலைமைச் செயலகத்திற்கு தகவல் தெரிவித்து அதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தங்களுக்காக ஒரு அதிகாரியை தனியாக நியமித்து இதுகுறித்து தகவல் இருந்தால் உடனடியாக உங்களுக்கு தெரிவித்து உங்களை சென்னைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார் பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்