கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த அமைச்சர் செங்கோட்டையன் : பத்திரிகையாளர்களுக்கு மாஸ்க் வழங்கினார்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட  நகராட்சியில்  அரசு மருத்துவமனை, வட்டாச்சியர் அலுவலகம், நகராட்சி அலுவலகம்,கோட்டாட்சியர் அலுவலகம்  உட்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர்  அரசு அலுவலர்களுக்கு முக கவசம் மற்றும் கிருமி நாசினி வழங்க பட்டது.அரசு மருத்துவமனை மற்றும் காவல் துறைக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யும் கருவியை அமைச்சர் வழங்கினார்.  தொடர்ந்து பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் அனைவருக்கும் முகக்கவசம் வழங்கப்பட்டது.இதில் கோட்டாட்சியர் ஜெயராமன்,கோபி காவல் துறை துணை கண்காணிப்பாளர் தங்கவேலு, காவல் துறை ஆய்வாளர் சோமசுந்தரம், தாசில்தார் சிவசங்கர்,கோபி அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அதிகாரி  ஆனந்தன்  உடன் இருந்தனர்.