இது அடாவடி போலீஸ் இல்ல.. அன்பான போலீஸ் : வீடு தேடி மருந்து கொடுக்குறாங்க

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் இருக்க குற்றவியல் நடைமுறை சட்டம் 1973 பிரிவு 144-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்திலும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளதால் மூத்த குடிமக்கள் மற்றும் வயதில் முதியோர் உணவு மற்றும் அன்றாட தேவைகளுக்கு சிரமப்படும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பாக ஏற்கனவே நடைமுறைபடுத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ள ”ஹலோ சீனியர்ஸ்” திட்டத்தின் தொலைபேசி எண். 96558-88100 வாயிலாக அழைக்கும் பட்சத்தில் அப்பகுதியில் உள்ள காவல் துறையினர் மூலமாக அவர்களுக்கு தக்க நிவாரணம் மற்றும் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் இதுவரை 247 அழைப்புகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெறப்பட்டு முதியோர்களின் தேவைகளான உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய தேவைகள் விரைந்து வழங்கப்பட்டுள்ளன. இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றும், காவல் துறைக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற நிகழ்வுகள் மூலம் ஈரோடு மாவட்ட காவல் துறை பொதுமக்களின் நண்பன் என்பதனை நிரூபிக்கும் வகையில் செயல்படுவதாகவும் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் இச்சேவையை முதியோர் அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.Hello Seniors திட்ட த்தில் 24.03.2020-ம் தேதி 03.25 மணிக்கு தொலைபேசி மூலம் பவானியைச் சேர்ந்த மல்லிகா என்பவர் அழைத்து தனக்கு Blood Pressure இருப்பதாகவும் மாத்திரை வாங்க வெளியில் செல்லமுடியாமல் தவித்து வருவதாகவும் கூறியவருக்கு வீட்டிற்கு சென்று மாத்திரைகள் வழங்கப்பட்டது.Hello Seniors திட்டத்தில் 25.03.2020-ம் தேதி 14.05 மணிக்கு போன் செய்து தான் வீட்டில் தனியாக இருப்பதாகவும், தனக்கு தலை சுற்றல் இருப்பதாக கூறியதன் பேரில் அவருக்கு பழங்கள் வழங்கப்பட்டது.