3 மாதம் இ.எம்.ஐ., கட்ட வேண்டாம்: ரிசர்வ் வங்கியே சொல்லிருச்சு.

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையில் உலகமே முடங்கி இருக்கிறது. இந்தியாவிலும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க்ப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து மக்களும் வீடுகளில் முடங்கி உள்ளனர்.கூலி தொழிலாளர்கள் வயிற்றை நிரப்பவே சிரமப்பட்டு வருகின்றனர். நடுத்தர வர்க்கத்தினர் வயிற்ற்றுக்கு உணவு சேர்த்தாலும், வழக்கமான மாதாந்திர கடன் தவணைகளை நினைத்து கலங்கி வந்தனர். 


இந்த நிலையில், நேற்று தமிழக முதல்வர் எடபபாடி பழனிசாமி மறு உத்தரவு வரும் வரை கடன்களை கேட்கக் கூடாது என அறிவித்திருந்தார்.


மேலும் தற்போது ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இ.எம்.ஐ., தவணைகளை கட்ட வேண்டாம்; அவற்றுக்கு 3 மாதம் கால அவகாசம் அளித்திருப்பதாக கூறி உள்ளார். 


இதில் வீட்டுக்கடன், வாகனக்கடன், தனி நபர் கடன் உள்பட மொத்தமாக எல்லாக்கடன்களுக்கும் தவணை கட்டுவதற்கு 3 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். 


மேலும், இந்த தவணை கட்டாமல் இருப்பதற்கு அபராதம் விதிக்கக் கூடாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. 


இத்துடன் ‘’ரெப்போ வட்டி  விகிதம் 4.4 ஆக குறைக்கப்படும். ரிவர்ஸ் ரெப்போ 90 புள்ளிகள் குறைக்கப்பட்டு 4 சதவீதமாக நிர்ணயம் செய்யப்படுகிறது. பொருளாதார ஸ்திரதன்மையை காக்கும் வகையில் செயல்பட்டு வருகிறோம்.  பொருளாதார வீழ்ச்சியை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  

 

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.  இதுபோன்ற நிச்சயமற்ற தன்மை இதுக்கு முன்பு இருந்ததில்லை. பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்வோம்.”என்றார்.

 

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பால் வீடு, வாகனங்களுக்கான கடன் வட்டி குறைய வாய்ப்பு உள்ளது. என்றும் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.