வெள்ளாளபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனையில் நோய்த்தடுப்பு பணி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெள்ளாளபாளையம்  ஊராட்சியில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அவர்களின் ஆலோசனையின்படி கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக லாரிகளின் மூலம் ஊராட்சி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது, பிறகு அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மருத்துவர், செவிலியருக்கு முக கவசம்,முமுஉடல் கவசம் வழங்கப்பட்டது.


இந்தநிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் சத்தியபாமா வேலுமணி, யூனியன் கவுன்சிலர் வெள்ளாளபாளையம் கணேஸ் (எ) கல்யாணசுந்தரம்,திலகவதி வாசுதேவன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமூர்த்தி, நஞ்சை கோபி ஊராட்சி மன்ற தலைவர் கோபால், மாணவரணி செந்தில், மற்றும் பலர் உடன் இருந்தனர்.