கொரோனா தடுப்பு பணியில் சளைக்காமல் பணியாற்றும் சத்தியமங்கலம் போலீசார்

ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் உத்தரவின்பேரில் சத்தியமங்கலம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுப்பையா தலைமையிலான  ஆய்வாளர்கள்,துணை ஆய்வாளர்கள், சிறப்பு துணை ஆய்வாளர்கள், காவலர்கள், தனிப்பிரிவு ஆகியோர் அடங்கிய குழுவினர்  சத்தியமங்கலம் உட் கோட்ட பகுதிகளான ஆசனூர்,கடம்பூர், தாளவாடி,பங்களாபுதூர், புளியம்பட்டி, சத்தியமங்கலம், பவானிசாகர் உள்ளிட்ட காவல் நிலைய பகுதியில் வாழும் பொதுமக்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் தீவிரமாக செய்து வருகின்றனர்.


இந்நிலையில் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் ஆலோசனைபடி,நகராட்சி நிர்வாகம், தினசரி மார்கெட் சங்கத்தினர் இணைந்து தினசரி மார்க்கெட்டை மூன்றாகப் பிரித்து அந்தந்த பகுதியில் வசிக்கும் மக்கள் எளிதாக வாங்கி செல்ல, அதிக கூட்டம் கூடாமல் இருக்க வடக்குபேட்டை சந்தை பகுதியிலும்,பழைய கடைவீதி பழைய மார்க்கெட் பகுதியிலும், சத்தியமங்கலம் பஸ் நிலையத்திலும் அமைத்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக சத்தியமங்கலம் பஸ் நிலையத்தை தற்காலிக மார்கெட்டாக மாற்றியுள்ளனர். இ


பொதுமக்கள் பேருந்து நிலையம் வந்து மூன்றடி இடைவெளியில் வரிசையாக நின்று காவல்துறையின் அறிவுரையின் படி காய் கறிகள் வாங்கி செல்கின்றனர்.