தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 9 ஆக உயர்வு..!

 


தமிழகத்தில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. கலிபோர்னியாவில் இருந்து தமிழகம் வந்த 64 வயது பெண்மணி, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், சென்னை - ஸ்டான்லி மருத்துவமனையின் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.


துபாயில் இருந்து தமிழகம் வந்த 43 வயது நபர், பாளையங்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையின் தனிமை வார்டில், தீவிர மருத்துவ கண்காணிப்பில் தங்க வைக்கப்பட்டு உள்ளார்.


இந்த தகவலை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயகுமார், தனது டுவிட்டர் வலைப்பக்கம் மூலம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளார். ஏற்கனவே, தமிழகத்தில், கொரோனா தொற்றுக்கு 6 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் காலையில் ஸ்பெயினில் இருந்து வந்தவருக்கும் பாதிப்பு இருந்ததால் அந்த எண்ணிக்கை தற்போது 9 ஆக உயர்ந்துள்ளது.


இதுவரை சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோவை ஆகிய சர்வதேச விமான நிலையங்களுக்கு, வந்திறங்கிய 2 லட்சத்து 5 ஆயிரத்து 396 பேருக்கு, மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.


இவர்களில், 9 ஆயிரத்து 424 பேர் மீது சந்தேகம் எழுந்ததால், 28 நாள் தனிமை முகாம்களில் தங்க வைக்கப் பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அதிகபட்சமாக 2 ஆயிரத்து 921 பேர், சென்னை பகுதிகளை சேர்ந்தவர்கள்.


தமிழகத்தில் 443 பேருக்கு ரத்த மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டதில் 84 பேரின் மருத்துவ முடிவுக்காக காத்திருப்பதாக சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.


Previous Post Next Post