ஊரடங்கில் திருமணம்..மாஸ்க் அணிந்து தாலிகட்டிய மணமகன்

கொரோனா  வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள  நிலையில் திருப்பூர் அருகே சேவூர் அளகாத்திரி  பாளையம் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் எளிமையாக நடைபெற்ற திருமணம். 15க்கும் குறைவான உறவினர்களை கலந்துகொண்டு வாழ்த்து



திருப்பூர் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் செந்தமிழ்ச்செல்வி ஆகியோரது மகன் ஸ்ரீகாந்துக்கும் சேவூர் அருகே 
அளகாத்திரி பாளையம்  பகுதியை சேர்ந்த கருப்பசாமி லதாமணி ஆகியோரது மகள் தேன்மொழி ஆகியோரது திருமணம் பெரியோர்களால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பேசி நிச்சயிக்க பட்டது இவர்களது திருமணம் அவிநாசியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது.


 


நாடு முழுவதும் கொரோனா  வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக  ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் திருமணத்தை எளிய முறையில் கோவிலில் நடத்த முடிவு செய்தனர்.


உடனடியாக அழைப்பிதழ் கொடுத்த உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தகவல் தெரிவித்துவிட்டு சுய ஊரடங்கு ஒத்துழைப்பு கொடுத்து திருமணத்தை எளிய முறையில் மணமகள் வீட்டருகே உள்ள விநாயகர் கோவிலில் திருமணம் நடைபெற்றது இந்த திருமண நிகழ்ச்சியில் உறவினர்கள் நண்பர்கள் 15க்கும் குறைவான அளவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்


Previous Post Next Post