ஊரடங்கின் முதல் நாளிலேயே முழுவதுமாக முடங்கிய திருப்பூர் மாநகரம்

  திருப்பூர் மாநகரில் இன்று 144 தடையை ஒட்டி மாநகரம் முழுவதுமாக முடக்கம் கண்டிருக்கிறது.  


பனியன் தொழிலை நம்பி 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கும் திருப்பூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு திரும்பி சென்று விட்டனர்.


இதனால் திருப்பூரில் மக்கள் எண்ணிக்கை குறைந்து உள்ளது. ஊரடங்கின் முதல்நாளான இன்று திருப்பூரில் ஓரிரு காய்கரி கடைகளுக்கு காய்கறிகள் வாங்கவும், மளிகை ஜாமான்கள் வாங்கவும் மட்டும் பொதுமக்கள் வெளியில் வந்தனர்.வாண்டு இளைஞர்கள் சிலர் இரு சக்கர வாகனங்களில் அதிவேகத்தில் சென்றனர்.


 திருப்பூர் அவிநாசி ரோடு, பி.என்.ரோடு, 60 அடி ரோடு, கொங்கு மெயின் ரோடு, ஊத்துக்குளி ரோடு, காங்கயம் ரோடு, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, மங்கலம் ரோடு, காலேஜ் ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட், புது பஸ் ஸ்டாண்ட், அனுப்பர்பாளையம், பாண்டியன் நகர் உள்பட மாநகரம் முழுக்க அனைத்து பகுதிகளிலும் மக்கள் வீடுகளில் முடங்கினர்.


 இதனால் எங்கும் வெறுமை மட்டுமே இருந்தது. எந்த நேரமும் வாகனசத்ததால் காது கிழியும் திருப்பூரில் இன்று பலத்த மவுனம் தான் நிலவுகிறது.


 ஓரிரு ஓட்டல்களில் பார்சல் கட்டிக்கொடுக்கப்பட்டன. சில தன்னார்வலர்கள் வீதிகளில் வசிப்போருக்கு உணவு வழங்கினர். போலீசார் வெளியில் சுற்றுபவர்களை கட்டுப்படுத்தி வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.


பஸ் இல்லாமல் வட இந்திய ஜோடி நடந்து சென்றனர். துப்புரவு பணியாளர்கள் தங்கள் கடமையை கண்ணும் கருத்துமாக செய்து கொண்டு இருந்தனர்.