கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்: களத்தில் இறங்கி பணியாற்றும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

கோபி தினசரி மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்க கூட்டம் கூட்டமாக வரும் மக்களால் வைரஸ் நோய் பரவும் நிலை உள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் அவர்களிடம் சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வேண்டுகோள் வைத்தனர்.


அதனைதொடர்ந்து மாலை அனைத்து சங்க நிர்வாகிகளிடமும் வணிகர் சங்க நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்து கோபி பஸ் நிலையத்தை தற்காலிக மார்க்கெட்டாக நாளை ஞாயிறு காலை முதல் செயல்படும் என அறிவித்தார்.


வரும்மக்கள் எவ்வித சிரமமுமின்றி காய்கறிகளை வாங்கிச் செல்ல கடைகளுக்கு கடை இடைவெளி விட்டு பொருட்கள் வாங்க ஏதுவாக நகராட்சி நிர்வாகத்திடம் மார்க் கோடுகள் அமைக்க உத்தரவும் பிறப்பித்தார். அமைச்சரின் இந்த துரித நடவடிக்கையை பொதுமக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.