கொரோனா நோய் தடுப்ப: தீயணைப்பு வாகனம் மூலம் மருந்து தெளிப்பு பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதிகளில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக மாண்புமிகு சுற¦றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி  திரு. என¦. நடராஜன¦அவர்கள் தீயணைப்பு துறை வாகனம் மூலம் வீடுகளில் கிருமி நாசினி தெளித்து  இன்று 29.03.2020  துவக்கிவைத்தார்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதிகளில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொன்மலை கோட்டம்  கே.கே.நகர் காவலர் குடியிறுப்பு பகுதி , மன்னார்புரம் , எம்.ஜி.ஆர்.நகர் ஆகிய பகுதிகயில் மாண்புமிகு சுற¦றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி திரு. என¦. நடராஜன¦அவர்கள் தீயணைப்பு துறை வாகனம் மூலம் வீடுகளில் கிருமி நாசினி தெளித்து இன்று 29.03.2020  துவக்கிவைத்தார். இந்நிகழ்வில் மாநகர காவல் துணைஆணையர் திருமதி.என்.எஸ்.நிஷா ஐ.பி.எஸ் அவர்கள்,  மாநகராட்சி ஆணையர் திரு.சு.சிவசுப்பிரமணியன் அவர்கள், நகர் நல அலுவலர் திரு.அ.ஜெகநாதன், உதவி ஆணையர் திரு.எம்.தயாநிதி மற்றும் பலர் கலந்துகொண்டார்கள்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதிகளில் கொரோன நோய் தடுப்பு நடவடிக்கையாக மாநகராட்சியின் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கோள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சி நான்கு வாகனங்கள், தீயணைப்பு துறை வாகனம் மற்றும் 100தூய்மை பணியாளர்கள் மூலம் கை தெளிப்பான் கொண்டு  ஒரு நாளைக்கு சுமார் 100 தெருக்கள் மற்றும் சாலை ஓரங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

இன்று 29.03.2020 பொன்மலை கோட்டம்  கே.கே.நகர் காவலர் குடியிறுப்பு பகுதி ,மன்னார்புரம் , எம்.ஜி.ஆர்.நகர், பாலக்கரை,இ.பி.ரோடு முதல் எஸ்.ஆர்.சி. கல்லூரி வரையும், சத்திரம் பேருந்து நிலையம் முதல் மரக்கடை எம்.ஜி.ஆர் சிலை, ராமகிருஷ்ணா பாலம் வழியாக நத்தர்ஷா பள்ளிவாசல், ஹோலிகிராஸ்வரை கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்றது இதனை மாண்புமிகு சுற¦றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி திரு. என¦. நடராஜன¦அவர்கள் நேரில் பார்வையிட்டு மாநகராட்சி அனைத்து பகுதிகளுக்கும் கிருமி நாசினி தெளிக்கவேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.