திருவண்ணாமலையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

திருவண்ணாமலை வேங்கிக்கால் சமுதாய கூடம் அருகில் தமிழக அரசு போக்கு வரத்துக்கழக அண்ணா தொழிற்சங்க தி.மலை மண்டலம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், ஸ்மார்ட் டிவி, வழங்கும் விழா நேற்று நடந்தது. இந்த விழாவுக்கு போக்குவரத்துக்கழக அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் டி.மனோகரன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர்கள் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகிக்க, ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.முருகன் அனைவரையும் வரவேற்றார். இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தெற்கு மாவட்ட கழக செயலாளரும் அமைச்சருமான சேவூர் எஸ்.ராமச்சந்திரன், ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளையும், 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் 3 அரசு பள்ளிகளுக்கு ஸ்மார்ட் டிவியும் வழங்கி அன்னதானத்தை தொடங்கிவைத்தார். இந்த விழாவில் மாவட்ட கழக இணை செயலாளர் நளினி மனோகரன், துணை செயலாளர் அமுதா அருணாச்சலம், தி.மலை நகர செயலாளர் ஜெ.எஸ். (எ) ஜெ.செல்வம், ஒன்றிய கழக செயலாளர் ஏ.கே.குமாரசாமி, மண்டல தலைவர் மதியழகன், முன்னாள் மண்டல தலைவர் பி.உத்தண்டி, பணிமனை செயலாளர் பி.ஆனந்தன், மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முடிவில் மண்டல பொருளாளர் டி.கணபதி நன்றி கூறினார். முன்னதாக திருவண்ணாமலை அடுத்த கீழ்நாச்சிப்பட்டு புறவழிச்சாலை அருகிலுள்ள ஈசா நாற்று பண்ணையில் மகாத்மா பசுமை இந்திய இயக்கத்தின் ஈசா பசுமை கரங்கள் திட்டத்தின்கீழ் காவேரி கூக்குரல் இயக்கத்திற்காக 10 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்திக்கான துவக்கவிழாவில் கலந்து கொண்டு அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் விதைகளை தூவி திட்டத்தை துவக்கிவைத்து, ஈசா நர்சரியில் மரக்கன்றுகள் நட்டு பல்வேறு வகை மரங்கள் மற்றும் பாரம்பரிய மூலிகை செடிகளின் கண்காட்சியையும் பார்வையிட்டார். இதில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.அருள்செல்வம், வாழவச்சனூர் வேளாண் கல்லூரி முதல்வர் எம்.பாண்டியன், இணை பேராசிரியர் அன்புமணி, வேளாண் துணை இயக்குநர் பெ.வடமலை, வருவாய் ஆய்வாளர் ஆர்.காவேரி, கிராம நிர்வாக அலுவலர் ரூபா ஆகியோர் கலந்து கொண்டனர்.


Previous Post Next Post