தென்காசி - காசி விஸ்வநாதர் கோவில் தேரோட்டம்!

தென்காசியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த  ஸ்ரீ உலகம்மன் சமேத காசி விஸ்வநாதர் ஆலயத்தில் மாசித் திருவிழாயின் 9 ஆம் நாள்  திருவிழாவான இன்று தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்...

தென்காசியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த  ஸ்ரீ உலகம்மன் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் மாசி திருவிழா, ஐப்பசி திருக்கல்யாண விழா ஆகிய இரண்டு திருவிழாக்கள்வெகு விமர்சையாக நடக்கும்.


 

இந்தாண்டு மாசி திருவிழா கடந்த 28ம் தேதி  கொடி ஏற்றத்துடன் துவங்கியது.  தினந்தோறும் சுவாமி, அம்பாள்க்கும், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாரதனையும்,பின்னர்  வாகனங்களில் வீதி உலா நடந்தது.

 

முக்கிய நிகழ்வான இன்று 9 ஆம் திருவிழாவையொட்டி காசி விஸ்வநாதர், 

உலகம்மன்க்கு தனித்தனி தேர்களில் அலங்கரிக்கப்பட்டு தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இவ்விழாவை இந்து சமய அறநிலையத் துறையினர் மற்றும் கட்டளை தார்கள் செய்து இருந்தனர்.

இதில் தென்காசி வட்டார  பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா தென்காசி கோயில் செயல் அலுவலர் யக்ஞ நாராயணன் மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம் வக்கீல் குமார் பாண்டியன் கார்த்திக் குமார் சின்ன துரை பாண்டியன் இலஞ்சி அன்னையாபாண்டியன் மாரிமுத்து சுப்புராஜ் வைகை குமார் ராஜாமணி டெக்ஸ்டைல்ஸ் ராஜாமணி முன்னாள் கவுன்சிலர்கள் கருப்புசாமி சங்கர சுப்ரமணியம் இந்து முன்னணி நகர தலைவர் இசக்கிமுத்து திருநாவுக்கரசு நாராயணன்

Previous Post Next Post