முதல்வர் விழாவுக்கு பந்தல் கால்

திருப்பூரில் வருகிற 15 ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நேரில் பங்கேற்று அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுகிறார். முதல்வர் பங்கேற்கும் இந்த விழாவுக்கான மேடை அமைக்கும் பணிக்கு பந்தல் கால் நடும் விழா அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இதில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி பந்தல் கால் நாட்டினார். இந்த விழாவில் கலெக்டர் விஜய கார்த்திகேயன்,  முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், எம்.எல்.ஏ., க்கள் சு.குணசேகரன், கே.என்.விஜயகுமார், கரைப்புதூர் நடராஜன், தனியரசு, போலீஸ் எஸ்.பி., திஷா மிட்டல்,  துணை கமிஷனர் பத்ரி நாராயணன், டி.ஆர்.ஓ., சுகுமார், அர்பன் வங்கி தலைவர்  பி.கே.எஸ்.சடையப்பன்,முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பழனிசாமி, பரமசிவம், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், முன்னாள் மண்டல தலைவர் ஜெ.ஆர்.ஜான், வக்கீல் கே.என்.சுப்பிரமணியம், யு.எஸ்.பழனிசாமி, அன்பகம் திருப்பதி, கண்ணப்பன்,  மார்க்கெட் சக்திவேல், டாக்டர் சீனியம்மாள், தர்மலிங்கம், சண்முகசுந்தரம், உஷா ரவிக்குமார், அட்லஸ் லோகநாதன், நீதிராஜன்,  ரத்தினகுமார், ஷாஜகான், உள்பட பலர் பங்கேற்றனர்.