கன்னடத்தில் ரீமேக்காகும் அசுரன்
வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் கடந்தாண்டு வெளியாகி வெற்றி பெற்ற அசுரன் படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட உள்ளது.பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் அசுரன். தீண்டாமை உள்ளிட்ட அடக்குமுறைக்கு எதிராக பேசிய இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடிய இப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனையும் படைத்தது.


அசுரன் படம் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் தனுஷ் வேடத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். மஞ்சு வாரியர் வேடத்தில் பிரியாமணி நடிக்கிறார். 


இந்நிலையில், அசுரன் படத்தை கன்னடத்திலும் ரீமேக் செய்ய உள்ளனர். இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் தனுஷ் வேடத்தில் கன்னட சூப்பர்ஸ்டார் சிவ ராஜ்குமார் நடிக்க உள்ளார். இப்படத்தை ஜேக்கப் வர்கீஸ் இயக்க உள்ளார்.