ஏழை மக்களுக்கு அண்ணதானம் வழங்கிய விஜய் மக்கள் இயக்க நிர்வாகி

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

கடலூர் மாவட்டம் விஜய் மக்கள் இயக்கம் விலையில்லா உணவகத்தில், நடிகர் விஜய் ஆணைகினங்க மாநில பொருப்பாளர் முன்னால் சட்டமன்ற உறுப்பினருமான புஸ்ஸீ. ஆணந்த் மற்றும் மாவட்ட தலைவர் சீணு தலைமையில், மங்களூர் ஒன்றிய அமைப்பாளர் ஆவட்டி ஆர்த்தி உணவகம் மற்றும் பேக்கிரி உரிமையாளர் எம்.எல்.அரவிந்த் பிரியதர்ஷினி தனது முதலாம் ஆண்டு திருமணநாள்  முண்ணிட்டு 110ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து 10 நாட்களாக அண்ணதானம் வழங்கியுள்ளார்.

 

இவரின் நற்செயலை பார்த்து சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர் அதோடு உணவு பெற்ற ஏழை மக்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அரவிந்த் கூறுகையில் ஏழை எளிய மக்கள் உணவு இல்லாமல் தவிர்த்திடவும் சமூகசேவை செய்வதும் தான் தனது  லட்சியம் என கூறினார். மாவட்ட செயலாளர் ராஜசேகர், மாவட்ட பொருளாலர் புருஷோத்தமன், துணை தலைவர் பச்சையப்பன், துணை செயலாளர் அண்பு, ராஜ்குமார், மங்களூர்  ஒன்றிய தலைவர் கண்ணதாசன், ஒன்றிய பொருளாலர் நீலகண்டன் மற்றும் விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் உடனிருந்தனர்.