கனரா வங்கி அதிகாரிகள் சங்க மகளிர் தின மாநாடு

கனரா வங்கி அதிகாரிகள் சங்கம், திருப்பூர் மண்டலத்தில் இளைஞர் மற்றும் பெண்கள் தின மாநாடு 08 03 2020 இல் நடந்தது. இதில் பங்கேற்ற கனரா வங்கி அதிகாரிகள் சங்கத்தின் மற்றும் அனைத்திந்திய தேசியமயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகள் சங்கத்தின் பொது செயலாளர்  GV மணிமாறன் கூட்டத்தை வாழ்த்தி பேசினார். வங்கி துறை தற்போது எதிர் கொண்டிருக்கும் நிலையை அவர் விவரித்தார்.


11 ஆவது ஊதிய இருதரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு அறிவித்திருக்கும் நிலையில், சென்னை உயர்நீதி மன்றம், மதுரை பெஞ்சில் 4 நபர்களால் தாக்கல் செய்து ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் ரிட் மனுக்களின் விளைவுகளும் கருத்தில் கொள்ள வேண்டிய கட்டாயம் உருவாகி இருக்கின்ற நிலைமை. ஊதிய மசோதா பாராளமன்றத்தில் டிசம்பர் 2019 இல் தாக்கல் செய்து விட்டபடியால், மசோதாவில் வங்கி துறை இன்சூரன்ஸ் துறை ஊழியர்களையும் அதில் உட்படுத்தி இருப்பதனால், அந்த சட்டத்தில் குறிப்பிட்டுள்ள படி குறைந்த பட்ச ஊதியத்திற்கு வங்கி இருதரப்பு ஒப்பந்தத்தில் அதிகாரிகள் சங்கங்களின் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது. சமீபத்திய அரசின் வங்கிகள் இணைப்பு நடவடிக்கையும் தவறானது. தனியார் மயமாக்கப்படுவதற்கான முன் கட்டம் தான் வங்கிகளின் இணைப்பு. எஸ் பாங்கின் சமீபத்திய நிலை. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளே நம் நாட்டிற்கு உகந்தது ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் அதிகாரிகளுக்கு பென்ஷன் தொகை  ஆகியவை பற்ற்றி அவர் பேசினார்.


  கனரா வங்கி அதிகாரிகள் சங்கம், திருப்புர் மண்டலத்தின் செயலாளர்   மனோஜ் சுந்தர் இளைஞர் மாநாட்டு ஏற்பாடுகளையும்,   மீனாட்சி அவர்கள் பெண்கள் தின மாநாட்டு ஏற்பாடுகளையும் ஏற்று நடத்தினர்.