தமிழ்நாடு சட்டப் பேரவை  அரசு உறுதிமொழிக்குழு தலைவராக ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை மீண்டும் நியமனம்

 


 

தமிழ் நாடு சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழு தலைவராக ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரையை மீண்டும் நியமனம் செய்து சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.


இன்பதுரை எம்எல்ஏ

 

நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருபவர் ஐஎஸ் இன்பதுரை. இவர் தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதி மொழி குழு தலைவராக மீண்டும் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இந்த நியமன அறிவிப்பை தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் இன்று சட்டமன்றத்தில் வெளியிட்டார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதி மொழி குழுவானது ஒவ்வொரு மாவட்டம்தோறும் பயணம் செய்து மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அரசு உயர் அதிகாரிகளை கூட்டி சட்டப்பேரவையில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் அளித்துள்ள உறுதிமொழிகள் எவை எவை அவை நிறைவேற்றப்பட்டு உள்ளனவா என்பதை ஆய்வு செய்து தமிழக சட்டப்பேரவைக்கு அறிக்கை அளிக்கும் உயர்ந்த அதிகாரம் உள்ள அமைப்பு ஆகும்.

இக்குழுவின் தலை வரை ஒவ்வொரு வருடமும் சட்டமன்ற கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை முடிவடையும்போது சட்டமன்ற தலைவர் பேரவையில் தேர்ந்தெடுத்து அறிவிப்பார்.  ஏற்கனவே ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினரான இன்பதுரை கடந்த 2 ஆண்டுகளாக சட்டமன்ற அரசு உறுதிமொழி குழு தலைவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் இந்த முறை இன்பதுரை மீண்டும் தமிழ்நாடு சட்டமன்ற அரசு உறுதிமொழி குழு தலைவராக பேரவை தலைவரால் அறிவிக்கப்பட்டுள்ளார்.