திருப்பூரில் வெளிமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

திருப்பூரில் வெளிமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேட்டி.


கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன், மாவட்ட சுகாதார அலுவலர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கலந்து கொண்ட கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் 
மாவட்ட எல்லையில் 41 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்கள் முழுமையாக சோதனை செய்யப்பட்ட பின்னரே அத்தியாவசிய தேவைக்கு மட்டும் அனுமதிக்கப் படுகின்றனர். கேரளாவில் இருந்து வருபவர்கள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளனர். 60 வார்டுகளில் 47 வண்டிகள் மூலம் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது. 22 மாநிலங்களை சேர்ந்த 41273 பேர் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.அவர்களுக்கு தேவையான உணவு பொருட்களை தன்னார்வலர்கள் உதவியுடன் மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளது. தொழிலாளர்கள் பணியாற்றும் நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் அறிவித்துள்ள  நிவாரண தொகை வழங்கும் பணிகள்  2ம் தேதி முதல்  துவங்கும். ஒரு மணி நேரத்திற்கு 10 பேருக்கு மட்டுமே வழங்கப்படும். டோக்கனில் நேரம் குறிப்பிடப்பட்டு வழங்கப்படும். திருப்பூரில் கொரோனா அச்சம் இல்லை என்றாலும் உடுமலையில்100 படுக்கை கொண்ட மருத்துவமனையாக அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டுள்ளது. திருப்பூரில் 150 படுக்கை வசதிகள் மற்றும் 86 வெண்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளது. தேவையான மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளது.  மருத்துவ குழுக்கள் சார்பில் ஊராட்சி பகுதிகளுக்கு சென்று சுகாதார அலுவலர்கள் அத்தியாவசிய மருந்துகளை வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
இறைச்சி கடை உரிமையாளர்கள் உடன் பேசி கடைகள் பகுதி வாரியாக பிரித்து கூட்டத்தை  கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம். என தெரிவித்தார்.