கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஊர்வலம்

 வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்து செம்பேடு ஊராட்சி பங்கரிஷிகுப்பம் எம்.ஜி.ஆர்.நகர் கிராமத்தில் இயங்கி வரும் மரு.அனிதா இலவச இரவுப்பள்ளி சார்பில் அருகாமை கிராம மக்களுக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில் மாணவ மாணவியர் விழிப்புணர்வு ஊர்வலம் மேற்க்கொண்டனர்.


முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரா.ரமேஷ் 

முன்னாள் ஊர் நாட்டாண்மை பா.காத்தவராயன் மற்றும் ஊர் நாட்டாண்மை சி.வெங்கடேசன் ஆகியோர் தலைமை ஏற்று விழாவை துவக்கி வைத்தனர்

 ஆசிரியர் ச.திருமலை வரவேற்புரை வழங்கினார். விழிப்புணர்வு கூட்டத்தில் ஊர் பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பெற்றனர். எம்.ஜி.ஆர்.நகர் , பங்கரிஷிகுப்பம், பொகளூர்,  சின்னராஜபாளையம்   ஆகிய சுற்றுவட்ட கிராமங்களுக்கு விழிப்புணர்வு ஊர்வலம் சென்று விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கப்பட்டது இறுதியாக ஊர்வலத்தில்.. செம்பேடு கிராம எழுத்தர்.தீபன் கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு குளிர்பானம் ஏற்பாடு செய்து கொடுத்து ஊர்வலம் நிறைவுப் பெற்றது