பாளையங்கோட்டை தூய திரித்துவ பேராலயத்தின் சார்பில் ரூபாய் 2 லட்சம் கொரோனா நிவாரண நிதி

பாளையங்கோட்டை தூய திரித்துவ பேராலயத்தின் சார்பில் ரூபாய் 2 லட்சம் நிதிக்கான காசோலையை கோவிட்- 19 நிவாரண நிதியாக  மாவட்ட வருவாய் அதிகாரி முத்துராமலிங்கத்திடம்  பாளையங்கோட்டை தூய திருத்துவ பேராலய சேகர தலைவர் பீட்டர் தேவதாஸ் வழங்கினார்.


அப்போது அவருடன் ஆலய செயலாளர்  ஜெப சந்தோஷ் ராஜ், பொருளாளர் அலெக்சாண்டர் சோமு, எல் சி எஃப் செயலாளர் அல்பர்ட் ஆகியோர் உடன் இருந்தனர் .


பின்னர் சேகர தலைவர் பீட்டர் ஞானதாஸ் நிருபர்களிடம் கூறுகையில் 


கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களை  கண்காணிக்கும் பணிகளில் ஈடுபட்டுவரும் மருத்துவத்துறை சார்ந்த ஊழியர்களுக்கு செலவு செய்யக்கோரி ரூபாய் 2 லட்சம் நிவாரண நிதியாக வழங்கியுள்ளோம். 


இந்த கொடிய நோய் மிக விரைவில் மக்களை விட்டு அகல தினமும் பிரார்த்தனை செய்து வருகிறோம். கடவுள் கொரோனா நோயில் இருந்து மக்களை விடுவிப்பார்  என்றார்.