ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா: வெசனப்படாதீங்க திருப்பூர் மக்களே.. இனி கொறஞ்சுரும்..

கடந்த இரண்டு நாட்களாக திருப்பூரில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை உயராமல் இருந்தது. 80 பேர் மட்டும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதனால் திருப்பூர்காரர்கள் சற்றே நிம்மதி அடைந்து இருந்தனர்.



(படம்: திருப்பூர் மாநகராட்சி அருகில் வரையப்பட்டுள்ள கொரோனா விழிப்புணர்வு ஓவியம்)


---------------------------------------------------------------------------------------------------------------


போதாக்குறைக்கு, திருப்பூரில் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட 21 பேருக்கு கொரோனா தொற்று ஏதும் உறுதியாகவில்லை என்று வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள் என திருப்பூர் கலெக்டரின் ‘ட்விட்டர்”. ‘பேஸ்புக்” செய்திகளில் வந்தது. எனவே திருப்பூர் பகுதி மக்களும், ‘இனி நம்ம ஊருக்கு நல்ல காலம்’ என்று நிம்மதியாக இருந்தார்கள். 


இந்த நிலையில், இன்றைய மாலை 28 பேர் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்ந்தது திருப்பூர் மக்களுக்கு அதிர்ச்சி அளித்தது. 


இதில் திருப்பூர் மாநகரை சேர்ந்த 7 பேர், அவிநாசியை சேர்ந்த 6 பேர், மங்கலத்தை சேர்ந்த 8 பேர், பல்லடத்தை சேர்ந்த 4 பேர்,உடுமலை, காங்கயத்தில் தலா ஒருவர் என 28 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 


ஏற்கனவே திருப்பூரில் 80 பேருக்கு தொற்று இருப்பதும், அதில் 10 பேர் 10 வயதுக்குட்ப்பட்டவர்கள் என்று சோகத்தில் இருந்தார்கள். இன்றைய கொரோனா அப்டேட் திருப்பூர் மக்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


ஆனால், திருப்பூர் பொதுமக்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. அது என்னவென்றால்,’ஏற்கனவே மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த 49 பேரில் 21 பேர் தொற்று ஏதும் ஏற்படாமல் இன்று அனுப்பப்பட்டார்கள். அதில் மீதம் இருந்த 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.


இதன்மூலம் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (அதாவது கொரோனா அறிகுறி உள்ளவர்கள்) எண்ணிக்கை என்பது தடாலடியாக குறைந்து விட்டது. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை 848 ஆக உள்ளது. 94 பேர் வீட்டு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். புதிட்தாக 86 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 


எனவே இனிவரும் நாட்களில் கொரோனா உறுதி செய்யும் எண்ணிக்கை உயர வாய்ப்பில்லை. 


Previous Post Next Post