வீடு வீடாக இலவச காய்கறி விநியோகம்: தமுமுகவினர் வாராவாரம் வழங்குகின்றனர்

வீடு வீடாக சென்று இலவசமாக  காய்கறிகள் விநியோகம் செய்த திருப்பூர் தமுமுகவினர்.தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோம்பை  கிளையின் சார்பாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்காக 5 டன் காய்கறிகள் 1500 குடும்பங்களுக்கு  ஒரு வாரத்திற்கு உதவும் வகையில் தமுமுககிளைத் தலைவர் யூசுப்  தலைமையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  அவரவர்கள் வீடுகளுக்கே சென்று காய்கறி பொட்டலங்களை விநியோகம் செய்தனர். 


 இந்நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர்
 அபுசாலி, தமுமுக மாவட்ட மருத்துவ அணி செயலாளர் தமீம்,முன்னாள் தமுமுக மாவட்ட  செயலாளர் முஜிபுர் ரஹ்மான்,ம மனிதநேயம  மாவட்ட துணைச்செயலாளர் சர்புதீன், கலந்துகொண்டு சமூக இடைவெளி விட்டு காய்கறி பொட்டலங்களை விநியோகம் செய்தனர்.