982 துப்புரவு மற்றும் தூய்மை பணியாளர்கள், ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு: அமைச்சர் செங்கோட்டையன் சொந்த செலவில் வழங்கினார்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட கோபி நகராட்சி அலுவலகத்தில் கொரோனா வைரஸ் நோய் பரவும் கடுமையான சூழலில் தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் தனது தொகுதியில்  தமிழகத்தில் முதன் முறையாக  சொந்த செலவில் 982 துப்புரவு மற்றும் தூய்மை பணியாளர்கள், அம்மா உணவக ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீட்டுக்கான அடையாள அட்டைகளை  வழங்கினார்.



மேலும் கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் உள்ள நபர்கள் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் நடமாடும் ஏடிஎம் வாகனத்தில் சேவையை துவக்கி வைத்தார். தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடமாடும் உர விற்பனை வாகனத்தின் சேவையை துவக்கி வைத்தார்.


உடன் மாவட்ட ஆட்சியர் கதிரவன்,மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ்,  கோட்டாட்சியர் ஜெயராமன்,நகராட்சி ஆணையர் தாணு மூர்த்தி, தாசில்தார் சிவசங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  பஷீர், குணசேகர், யூனியன் சேர்மன்  மௌதீஸ்வரன், முன்னாள் சேர்மன் கந்தவேல் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Previous Post Next Post