காசு பணம் எதுவுமே வேண்டாம், உயிர்வாழ உணவு மட்டும் போதும்..கொரோனா கும்மி ஆட்டத்தில் உருக்கம்

வீடியோவை காண:



கொரோனா வைரஸ் உலக நாடுகள் அத்தணையையும் உலுக்கி உள்ளது. இன்றளவில் பெரும்பாலான நாடுகளில் மக்கள் ஊரடங்கை கடைப்பிடித்து வாழ்கிறார்கள். அரசும், ஆர்வலர்களும் பல்வேறு விழிப்புணர்வு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த நிலையில், திருப்பூர் பவளக்கொடி கும்மி குழுவினர் கும்மிப் பாட்டு மூலம் விழிப்பூணர்வு ஏற்படுத்தும் வகையில், கொரோனா கும்மி ஆட்டம் ஆடி உள்ளனர். இதில் சமூக இடைவெளியை பின்பற்றி இவர்கள் ஆடிய கும்மி ஆட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 


 ‘ எங்கேயே இருந்து வந்த கொரோனா, இந்தியாவில் வந்துருச்சு கொரோனா” எனத்தொடங்கும் அந்த கும்மிப் பாடல் கொரோனா நோயைப்பற்றியும் அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகவும் தொடர்கிறது.


இந்த பாடலை பாடிக்கொண்டு, வீட்டின் ஹாலில் 4 பெண்கள், 3 ஆண்கள் என 7 பேர் கும்மி ஆட்டம் ஆடுகின்றனர். 


அந்தப்பாடலில் வரும் ‘கோடான கோடி பணம் வேண்டாம், நகை நட்டு எதுவுமே வேண்டாம், உயிர்வாழ உணவு மட்டும் போதும் என்று உணர்த்திய தருணம்.. என்ற வரிகள், தற்போதைய வாழ்வின் யதார்த்தத்தை எடுத்துரைப்பதாக உள்ளது. 


சமூக இடைவெளி, கைகழுவுதல், முக கவசம் அணிய வேண்டும் என்பது போன்ற விழிப்புணர்வுகளை வலியுறுத்தும் இந்த பாடல் பொதுமக்களை சிந்திக்க வைக்கும் என்பதில் ஐயமில்லை. 


கொரோனா பரவிவரும் இந்த வேளையில் பவளக்கொடி கும்மி குழுவினரின் இந்த பாடலும், எளியமுறையிலான நாட்டுப்புற கும்மி ஆட்டமும், அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. 


Previous Post Next Post