ச.ம.க சார்பில் ஏழை எளியோருக்கு அரிசி, உணவுப்பொருட்கள்: திருப்பூர் வடக்கு தொகுதி செயலாளர் எஸ்.பி.பிரகாஷ் வழங்கினார்

சமத்துவ மக்கள் கட்சியின், திருப்பூர் வடக்கு தொகுதி சார்பில் கொரோனா ஊரடங்கால் வீடுகளில் முடங்கி இருக்கும் ஏழை, எளியோருக்கு இலவச அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.திருப்பூர் பிச்சம்பாளையம், வாவிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 200 குடும்பங்களுக்கு திருப்பூர் வடக்கு தொகுதி செயலாளர் எஸ்.பி.பிரகாஷ் இலவச அரிசி பைகளை வழங்கினார். தொடர்ச்சியாக திருப்பூரில் உள்ள ஏழை, எளியோர், ஆதரவற்ற்றோர் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு உணவு, அரிசி, மளிகை பொருட்களை எஸ்.பி.பிரகாஷ் வழங்கி வருகிறார்.