கரோனாவுக்கு ஆந்திராவில் முதல் பலி

 


டெல்லியில் நடைபெற்ற ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட நபர் ஒருவர் சொந்த ஊரான விஜயவாடா திரும்பிய நிலையில், கடந்த 30 ஆம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்ட அவருடைய 55 வயது தந்தை விஜயவாடா அரசு மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.


மரணம் அடைந்த நபரின் மகன் டெல்லியில் நடைபெற்ற ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டு கடந்த மாதம் 17ஆம் தேதி வீடு திரும்பினார். இந்த நிலையில் கடந்த 30 ஆம் தேதி உடல் நிலை பாதிக்கப்பட்ட அந்த வாலிபரின் தந்தை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற போது அவருக்கு அதிகப்படியான ரத்த அழுத்தம், சர்க்கரை ஆகியவை உள்ளிட்ட உபாதைகள் இருந்தன.
இந்த நிலையில் கடந்த 30 ஆம் தேதி மருத்துவமனையில் மரணம் அடைந்த அந்த நபர் என்ன காரணத்தால் மரணமடைந்தார் என்ற சந்தேகம் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு இருந்தது.
எனவே அவருடைய உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை பூனாவில் உள்ள ஆய்வகத்துக்கு ஆந்திர சுகாதாரத்துறை அதிகாரிகள் அனுப்பி வைத்து காத்திருந்தனர்.
பூனாவில் உள்ள ஆய்வகத்தில் இருந்து கிடைக்கப்பட்ட முடிவில் மரணமடைந்த நபருக்கு கரோனா தொடர் இருந்தது உறுதி செய்யப்பட்டது.


டெல்லியிலிருந்து திரும்பிய அந்த வாலிபருக்கு கரொனா தொற்று உள்ள நிலையில் அவருக்கு விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவருடைய குடும்பத்தை சேர்ந்தவர்கள் உட்பட 29 பேரை அதிகாரிகள் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.