அளுக்குளி ஊராட்சியில் முதியோர், உடல் ஊனமுற்றோருக்கு உணவு:இந்துமதி பாண்டு வழங்கினார்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட அளுக்குளி ஊராட்சியில் நாடு முழுவதும்  ஊரடங்கு அமல்படுத்தியதை தொடர்ந்து ஊராட்சியில் உள்ள ஆதரவற்றோர், முதியோர் மற்றும் உடல் ஊனமுற்றோர் ஆகியோர்களுக்கு தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் ஆலோசனையின் படி,  ஊராட்சி மன்ற தலைவர் பி.இந்துமதி பாண்டு தலைமையில் உணவுகள் வழங்கப்பட்டது.அருகில் அளுக்குளி ஊராட்சி கழக செயலாளர் கே. பாண்டுரங்கசாமி,ஊராட்சி செயலர் கருப்பு சாமி,  துணை தலைவர், மற்றும் மன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.