கொரோனா நோய்த்தடுப்பு பணிகள்: களத்தில் இறங்கி பணியாற்றும் இன்பதுரை எம்.எல்.ஏ

ராதாபுரம்,திசையன்விளைமற்றும் வள்ளியூர் தாலுகாவுக்குட்பட்ட பணகுடி,திசையன்விளை,ராதாபுரம்,கள்ளிகுளம்,கூடன்குளம்,செட்டிகுளம்,சமூகரங்கபுரம் உள்ளிட்ட அனைத்துபகுதிகளிலும் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் கிருமிநாசினி தெளிக்கும் பணி கடந்த பத்து நாட்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை இன்பதுரை எம்எல்ஏ தினசரி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து  வருகிறார்.



உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழகம் முழுவதும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க தடுப்பு நடவடிக்கைகள் சுகாதாரத்துறை மூலம் தீவிரமாக நடந்து வருகிறது.



இந்த நிலையில் இன்று நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட திசையன்விளை தாலுகா இடையன்குடி சிஎஸ்ஐ சர்ச் தெரு, பேங்க் தெரு, உவரி சாலை உள்ளிட்ட இடங்களில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களை கொண்டு  கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. 


 அதை தொடர்ந்து வள்ளியூர் ஒன்றியம் மாடன் பிள்ளை தர்மம், ராஜகிருஷ்ணபுரம், கைலாசபுரம், லெவிஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் இன்று தீயணைப்புத்துறை வாகனத்தின் மூலம் தெருத்தெருவாக கிருமிநாசினி மருந்து பீச்சி அடிக்கப்பட்டு கொரோனா தடுப்புப் பணி நடைபெற்றது.



இந்த பணிகளை ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக சட்டப்பேவை அரசு உறுதிமொழிக்குழு தலைவருமான இன்பதுரை  நேரில் பார்வையிட்டார்.


கிருமி நாசினி தெளிப்பு பணியின்போது   தெருத்தெருவாக நடந்தே சென்ற இன்பதுரை பணிகளை பார்வையிட்டு ஊராட்சி மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு அவ்வப்போது உரிய ஆலோசனைகளை வழங்கினார்.
அப்போது ஒரு சில இடங்களில் அந்த பகுதி பொதுமக்கள்  தங்களுடைய தெருக்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட வேண்டும் என எம்எல்ஏ விடம் நேரில் வந்து வலியுறுத்தினர்.


இதனை உடனடியாக ஏற்றுக் கொண்ட இன்பதுரை எம்எல்ஏ பொதுமக்கள் கேட்டுக்கொண்ட அனைத்து தெருக்களிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணியை துரிதப்படுத்தியதோடு அப்பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும்போது பணியாளர்களுடன் நடந்தே சென்று பார்வையிட்டார். 


இதைப்போல சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரையிடம் தொலைபேசி மூலமும் வாட்ஸ்அப் மூலமும் தொடர்பு கொள்ளும் பொதுமக்கள் தங்கள் ஊர்களிலும் கிருமிநாசினி தெளிக்கபடவேண்டும் என்று கோரிவருகின்றனர்.
ஓரிரு திங்களுக்குள் ராதாபுரம் தொகுதியின் அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கபடவேண்டும் என சுகாதாரதுறை அதிகாரிகளுக்கு இன்பதுரை எம்.எல்.ஏ உத்தரவிட்டுள்ளார்.


கலந்து கொண்டவர்கள்


இந்நிகழ்ச்சியில் வள்ளியூர் வட்டார வளர்ச்சி அதிகாரி ஸ்ரீகாந்த், வள்ளியூர் முன்னாள் சேர்மன் அழகானந்தம், ராதாபுரம் அதிமுக ஒன்றிய செயலாளர் அந்தோணி அமல்ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Previous Post Next Post