வேப்பூர் அருகே சாலையில் விழுந்த புளியமரம்: தீயணைப்பு வீரர்கள்  அகற்றினர்கள்

வேப்பூர் அருகே சாலையில் விழுந்த   புளியமரத்தினை தீயணைப்பு வீரர்கள்  அகற்றினர்கள்


.


கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே  கடலூர் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தியம் பேருந்து நிலையம் அருகில் சாலையில் நின்றிருந்த பழமைவாய்ந்த புளியமரம்  நேற்று அதிகாலை 6 மணி அளவில் திடீரென விழுந்துவிட்டது 


இதை அவ்வழியே சென்ற சமூக ஆர்வலர்கள்  இதுபற்றி வேப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர் 


தகவலின்பேரில் வேப்பூர்  தீயணைப்பு அலுவலர் (பொறுப்பு) பாலகிருஷ்ணன் ஆலோசனையின் படி     தீயணைப்பு வீரர் கவாஸ்கர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து எந்திரம் மூலம் மரத்தை வெட்டி எடுத்து  ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி சாலையில் இருந்த புளிய மரத்தை அகற்றினர். 


இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களை பாராட்டினார்கள்.