இந்திய குடியரசு கட்சியின் சார்பில் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கினார்

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள பாபாசாகேப் சட்டமேதை டாக்டர்.பி. ஆர்.அம்பேத்கார் அவர்களின் 129.வது பிறந்தநாள் முன்னிட்டு இந்திய குடியரசு கட்சியின் சார்பில் குடியாத்தம் நகரில் உள்ள கொண்டசமுத்திரம் அம்பேத்கர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி உள்ளனர். இந்திய குடியரசுக் கட்சியின் மாவட்ட பொருளாளர் எஸ் வெங்கடேசன் தலைமை தாங்கினார். இந்திய குடியரகட்சியின் மத்திய மாவட்ட தலைவர் இராசி தலித் குமார் அவர்கள் உருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார். மற்றும் த. போ. க.நடத்துனர் பாஸ்கர், வில் முரசு நிருபர் மூர்த்தி சர்வதேச உரிமைகள் கழகம் வேலூர் வடக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் மற்றும் பாபாசாகேப் டாக்டர்.பி.ஆர். அம்பேத்கார் அவருடைய பாசமுள்ள நண்பர்கள் உடன் இருந்தனர்.