அத்தியாவசிய தேவைகளுக்கு உதவத் தயாராக இருக்கிறோம்: தென்காசி  இன்ஸ்பெக்டர்  ஆடிவேல் அறிவிப்பு 


 

தென்காசி, ஏப்.12-

தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக உதவத் தயாராக இருக்கிறோம் என காவல் ஆய்வாளர் ஆடிவேல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் கூறியிருப்பதாவது :

தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகுணாசிங் உத்தரவின்பேரில் தென்காசி டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் ஆலோசனையின்பேரில் தென்காசி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களின் நலனை முன்னிட்டு 144 தடை உத்தரவை கருத்தில்கொண்டு பொது மக்களுக்கு உதவிடும் வகையில் 3 செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

9943318742, 9345504558, 8754953113 

ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பொது மக்கள் தங்களுக்கு தேவையான உதவிகளை கூறலாம்.

வீட்டிற்கு காய்கறிகள் மளிகை பொருட்களும் இறைச்சியோ தேவைப்பட்டாலும் போன் மூலம் தெரிவிக்கலாம். 50 தன்னார்வலர்கள் இப்பணியை செய்ய காத்திருக்கின்றனர்.  பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் தங்களுக்கு தேவையான பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். பொருட்களின் விலையை மட்டும் செலுத்தினால் போதும். கூடுதல் தொகை ஏதும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. 

காலை 6 மணிமுதல் மதியம் ஒரு மணிக்குள் இந்த உதவியை கோரிப் பெறலாம்.

மருந்து தேவை என்றால் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மருத்துவமனைக்குச் செல்ல வேண்டி வாகன உதவி கோரினால் வாகன வசதி செய்து கொடுக்கப்படும். வாகனத்திற்கு உரிய நியாயமான வாடகை மட்டும் கொடுத்தால் போதும்.

மேலும் இரண்டு மூன்று மருத்துவர்களிடம் பேசி வருகிறோம். அதாவது யாருக்கேனும் சிறுசிறு உடல் நிலை கோளாறு ஏற்பட்டால் அவர்களை வீட்டிற்கு தேடிச்சென்று மருத்துவ சிகிச்சை அளிக்க மருத்துவர்களிடம் பேசி வருகிறோம். அவர்கள் ஒப்புக் கொண்டுவிட்டால் அப் பணியும் மேற்கொள்ளப்படும்.

144 தடை உத்தரவை மதித்து வீட்டிலேயே இருங்கள் வெளியே வரவேண்டாம் . கொரோனா நோயை  விரட்டியடிப்போம். இதற்கு நீங்கள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும். நாங்கள் உங்களுக்குத் துணையாக இருக்கிறோம் .

தென்காசி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தென்காசி,  குத்துக்கல்வலசை, அய்யாபுரம், வேதம் புதூர் , கீழப்புலியூர், சிந்தாமணி ஆகிய பொதுமக்கள் மட்டும் மேற்சொன்ன உதவி எண்களில் தொடர்பு கொண்டு உங்களில் அத்தியாவசியத் தேவைகளை கூறுங்கள். நாங்கள் செய்து கொடுக்க தயாராக இருக்கிறோம் . இவ்வாறு தென்காசி காவல் நிலைய ஆய்வாளர் ஆடிவேல் வீடியோ மூலம் செய்தி வெளியிட்டுள்ளார்

Previous Post Next Post