மொடச்சூர்,வெள்ளாங்கோவில் ஊராட்சிகளில் துப்புரவுப் பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்: அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட மொடச்சூர்,வெள்ளாங்கோவில் ஆகிய ஊராட்சிகளில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக தூய்மை பணியாளர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  வழங்கினார்.


மேலும் அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு புதிய ரேஷன் கார்டு மற்றும் முதியோர் உதவி தொகை வழங்குவதற்கான ஆணை போன்றவற்றையும் வழங்கினார். இதில் கோட்டாட்சியர் ஜெயராமன், தாசில்தார் சிவசங்கர்,வட்டார வளர்ச்சி அலுவலர் பஷீர்,குணசேகர், யூனியன் சேர்மன் மௌதீஸ்வரன்,ஒன்றிய செயலாளர் சிறுவலூர் மனோகரன்,யூனியன் கவுன்சிலர்கள் வெங்கடேஸ்வரி முருகேசன்,ஆப்பிள் டி.சாந்தி தன்னாசி,  மொடச்சூர் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன்,ஊராட்சி செயலர் ராஜாமணி,அதிமுக ஊராட்சி கழக செயலாளர் சந்திரசேகர், துணை தலைவர் கருப்புசாமி, முன்னாள் நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர் கந்தசாமி,  வெள்ளாங்கோவில் ஊராட்சி மன்ற தலைவர் சாமியாத்தாள்,சொசைட்டி தலைவர் பாலசுப்பிரமணியம், ஞானசுந்தரம், ஊராட்சி மன்ற செயலாளர் சண்முகம்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Previous Post Next Post