அச்சிறுப்பாக்கம் திமுக சார்பில் 100 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவி


 

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம்  கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் வாழ்வாதாரம் பெரிதும் பாதித்த நிலையில் பொதுமக்கள் நலன் கருதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி அச்சிறுப்பாக்கம் எம்.ஜி.ஆர்.நகர் 8வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய 100 குடும்பங்களுக்கு அரிசி மளிகை ஆகிய அத்தியாவசிய பொருட்களை பேரூராட்சி நகர செயலாளர் உசேன்  தலைமையில் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் ஏ.சி.முனுசாமி  முன்னிலையில் வழங்கினர்.

 

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் கே.பட்டாபி மற்றும் பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செயலாளர் ஏ.ஜெயமுருகன் ஆகியோர் செய்திருந்தனர்.

 

மேலும் ஒன்றிய பிரதிநிதி ஜி.ராஜ்குமார் அவைத்தலைவர் ஏ.சையத்முகமது முன்னாள் கவுன்சிலர் எம்.ரமேஷ் திமுக பிரமுகர் யு.துக்காராம் முன்னாள் கவுன்சிலர் கே.கண்ணன் வணிகர் பேரவை மாவட்ட செயலாளர் எஸ்.அப்துல்ரஜாக் கிளை செயலாளர்  டி.கணேஷ்குமார் திமுக இளைஞரணி அருண்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.