அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் காணொலி காட்சி மூலம் ஆலோசனை


 

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் இயக்குனர்அறிவுறுத்தலின் பேரில் காணொலி காட்சி மூலம் நேற்று ஆலோசனை வழங்கப்பட்டார்.

 

பேருராட்சிகளின் இயக்குநர் நேற்று அனைத்து மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர்கள் செயற்பொறியாளர்கள் உதவி செயற்பொறியாளர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து வழங்கப்பட்ட அறிவுரைக்கிணங்க நேற்று காஞ்சிபுரம் மண்டல பேருராட்சிகளின் உதவி இயக்குநர் பொ.மனோகரன் தலைமையில் காஞ்சிபுரம் மண்டலத்திற்குட்பட்ட காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு மாவட்ட அனைத்து பேருராட்சி செயல்அலுவலர்களுடன் காணோலி காட்சி மூலம் கீழ்கண்ட விவரப்படி அறிவுரை வழங்கப்பட்டார்.

 

இதில் தினசரி அனைத்து வார்டு பகுதிகளிலும் சுகாதார பணி மேற்கொள்ளப்பட்டு பிளீச்சிங் பவுடர் சுண்ணாம்பு லைசால்  கிருமி நாசினிகள் தெளிக்கப்படவேண்டும்

15 வார்டுகளில் தெளிக்கப்படும் கிருமி நாசினிகளின் தரத்தை பேரூராட்சிகளின் செயல் அலுவலர் ஆய்வு செய்த பின்னரே தெளிக்கப்பட வேண்டும் கொரோனா நோய் தடுப்பு கிருமி நாசினிகள் அனைத்தும் மே 2020 இறுதி வரை பயன்படுத்த போதுமான அளவு இருப்பு வைத்துக்கொள்ளவும், துய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை போதிய கால இடைவெளியில் மேற்கொள்ளவும், அரசு வழங்கும் சத்து மாத்திரைகள் வழங்கிடவும், பஜார்வீதி கடைகளில் பணி புரிபவர்கள் கட்டாயம் முககவசம் அணியவும் போதிய சமூக இடைவெளியினை கடை பிடிக்கவும்  அறிவுறுத்தப்பட்டது. 

 

மேலும் முககவசம் இல்லாமல் வெளியில் வருபவர்களுக்கு பேரூராட்சி மூலம் அபராதம் ரூ.100 வசூலிக்க தீர்மானம் இயற்ற அறிவுறுத்தப்பட்டது.

 

பேரூராட்சி அனைத்து வார்டு பகுதிகளிலும் வறட்சி காலத்தை முன்னிட்டு தடையின்றி சீரான குடிநீர் வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

 

இக்காணொலி காட்சியில் காஞ்சிபுரம் மண்டல பேருராட்சிகளின் உதவி இயக்குநர் அவர்களின் உதவியாளர் சுந்தரபாபு அவர்கள் கலந்து கொண்டு பேரூராட்சி செயல் அலுவலர் ஏ.சி.முனுசாமியிடம் கேட்டறிந்தார்.